மாமழை வேண்டி பாடுவோம்!
கீழிருக்கும் இரு பாடல்கள், சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் அருளிய மழை வேண்டும் "திருப்பாவை" பாசுரங்கள்! இவற்றை பலர் கூடிப் பாடி நெஞ்சுருக வேண்டினால், "பாழியம் தோளுடைய பத்மனாபன்", உலகத்தார் மகிழ, "சார்ங்கம் உதைத்த சரமழை" பெய்ய அருளுவான் என்று வைணவர்கள் நம்பி வருகிறார்கள்! இறை நம்பிக்கை உள்ள சென்னை வாசிகள், முடிந்தபோது, இப்பாசுரங்களை கூறி, மழையை அன்புடன் அழைக்கலாம்! நாடு செழிக்க நாமும் வாழலாம் அல்லவா?
476:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி*
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்*
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து*
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்*
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்*
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி-வாங்க *
குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
477:
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்*
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி*
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்*
பாழியம் தோளுடைய பற்பனாபன் கையில்*
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து*
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்*
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்*
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
0 மறுமொழிகள்:
Post a Comment